பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, மோதல் போக்கு நீடித்து வருகிறது.பாமகவின் தலைவராக, அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, அன்புமணி தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாவரம் தோட்டத்தில், மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொண்டர்கள் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



















