லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 14, 2025 வரை நடைபெற்ற 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றி, 1998 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாகத் தென்னாப்பிரிக்க அணி எதிர்பார்த்து வந்த ICC கோப்பையை மீண்டும் பெற வைத்தது. இந்த வரலாற்று வெற்றி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பதிக்கப்படும்.
இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்து 74 ரன்கள் பின்தங்கியது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 207 ரன்களுடன் முடிந்தது, இதில் ரபாடா மீண்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 282 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா, ஐடன் மார்க்ரமின் அபாரமான 136 ரன்கள் மற்றும் கேப்டன் டெம்பா பவுமாவின் 66 ரன்கள் உதவியுடன், 83.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியின் ஹீரோவாக விளங்கியவர் ஐடன் மார்க்ரம். முதல் இன்னிங்ஸில் டக்-அவுட் ஆன அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் 136 ரன்கள் குவித்து,. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இது அவரது 8வது டெஸ்ட் சதமாகும், மேலும் WTC இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் . தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மார்க்ரமின் இந்த இன்னிங்ஸ், . தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி, ஆல்-ரவுண்ட் பங்களிப்பை வழங்கினார்.
கேப்டன் டெம்பா பவுமா, காயத்துடன் களமிறங்கி 83 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து, மார்க்ரமுடன் 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது போட்டியின் மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் ஆகும். காயமிருந்த போதிலும், பவுமா தனது அணியை வழிநடத்திய விதம் பலராலும் பாராட்டப்பட்டது. “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம், தயாரானோம்,” என்று பவுமா போட்டிக்குப் பின் கூறினார். பவுமாவின் கேப்டன்ஷியில், . தென்னாப்பிரிக்க 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு தோல்வியும் இல்லாமல் சாதனை படைத்தது.