சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அமரன் திரைப்படம் இடம்பெறுவது தனக்கும், நாட்டிற்கும் கிடைத்த பெருமை என்று நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், நாட்டிற்காக, முப்படைகளைப் பற்றி நிறைய படம் எடுக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறினார். இது அரசியல் மேடை இல்லை என்பதால், அரசியல் பேச வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு, அமரன் படத்தை திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்திருப்பதற்காக தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் கூறினார்.



















