சென்னை மயிலாப்பூர் மற்றும் எழும்பூரில், 89 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் 584 குடியிருப்புகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மயிலாப்பூர் சீனிவாசபுரத்தில் 14 தளங்களுடன், 57 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில், 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோன்று எழும்பூர் வேம்புலி அம்மன் கோயில் தெருவில், 9 தளங்களுடன் 32 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
தலா 400 சதுர அடி பரப்பளவில் படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன், இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு மேயர் பிரியா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



















