பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார்.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.
அதனை மறுத்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். தர்மேந்திரா நலமுடன் இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும், அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், தர்மேந்திராவுக்கு வீட்டில் வைத்து, சிகிச்சை அளிப்பதாக அவரது குடும்பத்தினர், மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு, தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



















