ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாயாக இருக்கிறது.
அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 3 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், இன்று 800 ரூபாய் குறைந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 600 ரூபாயாகவும், ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாயாகவும் உள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
வெள்ளி ஒரு கிராம் 173 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும், வெள்ளி கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















